சசிகலா அக்கா மகனுக்கு ரூ.28 கோடி அபராதம். உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்

  • IndiaGlitz, [Friday,January 06 2017]

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 1991ஆம் ஆண்டு முதல்வர் பதவியை முதன்முதலில் ஏற்றபோது அவருடைய தோழி சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனின் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் முதலீடு இருந்ததாக கூறப்பட்டது.
டிடிவி தினகரன் வங்கி கணக்கிற்கு ஏராளமான பணம் வந்ததாக அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ், டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பில் தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை தீர்ப்பு அளித்தது. அமலாக்கத்துறையின் இந்த தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தினகரன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் என்று வாதத்தை மறுத்ததோடு அவருக்கு விதிக்கபட்ட அபராதம் சரியே என்று உறுதி செய்தனர்.